day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வாகன தணிக்கையில் 607 பேர் மீது வழக்குபதிவு

வாகன தணிக்கையில் 607 பேர் மீது வழக்குபதிவு

சென்னை மாநகரில் விபத்துகளை குறைக்கவும், சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் ரேஸ் மேற்கொள்பவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறப்பு வாகனத் தணிக்கைகளை மேற்கொண்டு சாலைவிதிகளை மீறியும், மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிராகவும் செயல்படுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1ஆம் தேதி சென்னை போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சிறப்பு வாகனத் தணிக்கையில் மோட்டார் வாகன விதிகளுக்குப் புறம்பான குறைபாடுள்ள வாகன பதிவுஎண் தகடு, மடக்கி வைக்கும் பதிவெண் தகடு மற்றும் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தியது தொடர்பாக 1036 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்றும் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சிறப்பு வாகனத் தணிக்கையில், ஒரேநாளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன், மியூசிக்கல் ஹாரன், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்கி வந்த 607 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்திய வாகனங்களை இயக்கிய 163 நபர்கள், மியூசிக்கல் ஹாரன் பொருத்திய வாகனங்களை இயக்கிய 17 நபர்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய வாகனங்களை இயக்கிய 103 நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மோட்டார் வாகன விதிகளுக்குப் புறம்பாக பதிவுஎண் தகடு பொருத்திய 291 நபர்கள் உடன் சேர்த்து மொத்தம் 607 நபர்கள் பேர் மீது சென்னை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சிறப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!