2020-21ம் ஆண்டு கட்சிகள் பெற்ற நன்கொடை மற்றும் அன்பளிப்பு வருவாய் விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் ஆவணங்கள் மூலம் அந்த கட்சிக்கு கிடைக்கும் வருமானம் கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2019-2020ம் ஆண்டில் ரூ.682 கோடியாக இருந்த வருமானம், 2020-21ம் ஆண்டில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரூ.285 கோடி வருமானமே கிடைத்துள்ளது. ரூ.400 கோடி அளவுக்கு வீழ்ச்சி கண்டிருப்பதால், காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.