திருவள்ளூரில் பிரபல வங்கி ஒன்றில் இருந்து பணம் எடுத்துச் சென்று அருகில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவது வழக்கம். அதன்படி, ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்ப வங்கியில் இருந்து ரூ.95 லட்சத்தை தனியார் ஏஜென்சி ஊழியர்களான ரவிச்சந்திரன் மற்றும் மோகன்குமார் ஆகியோர் எடுத்துச் சென்றனர். எப்போதும் போல, ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்பிய பின், அதில் ரூ.5 லட்சம் காணவில்லை என ஊழியர்கள் வங்கி மேலாளரிடம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வங்கியின் மேலாளர் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனியார் நிறுவன ஊழியர்கள் ரவிச்சந்திரன் மற்றும் மோகன்குமார் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.