15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31ஆவது லீக் ஆட்டத்தில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோத உள்ளது. லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ அணியில் குயிண்டான் டி காக், தீபக் ஹீடா, மர்கஸ் ஸ்டோனிஸ், அவேஷ்கான், ரபி பிஷ்னோய், ஜாசன் ஹோல்டர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணியில் விராட் கோலி, மேக்ஸ்வெல் தினேஷ் கார்த்திக், ஹசரங்கா, ஷபாஸ் அகமது, ஹேசில்வுட் உள்ளிட்ட முக்கிய வீரர்களும் களம் இறங்க இருக்கின்றனர். மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருக்கிறது. புள்ளி பட்டியலில் லக்னோவும் பெங்களூருவும் 8 புள்ளிகள் எடுத்து சமமாக இருப்பதால் யாரை யார் முந்துவர் என்று ரசிகர்கள் மிகுந்த் ஆர்வத்தில் உள்ளனர்.