கரூர் மாநகரில் இருசக்கர வாகனத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து உணவு கடத்தல் பிரிவினர் அந்தபகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கும் இடமளிக்கும் வகையில் சென்ற இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் முத்து நகர் பகுதியில் ஜவுளி துணி உற்பத்தி செய்யும் நிறுவன பெயர் பலகை மாட்டப்பட்டுள்ள கடைக்குள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அரிசி மூட்டைகளை கொண்டு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற அந்த இளைஞரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசியை கடத்திக்கொண்டு வந்து ஒன்று சேர்த்து வைத்து கனரக வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுக்கிறது. இதனையடுத்து அங்கு 63 மூட்டைகளில் சுமார் ஒன்றரை டன் ரேசன் அரிசிகளை பறிமுதல் செய்ததுடன், அந்த கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற இளைஞரை உணவு கடத்தல் பிரிவு காவலர்கள் கைது செய்தனர். இதனையடுத்து, ரகசிய தகவலின் பேரில் வட்டார வழங்கல் அலுவலர் மகேந்திரன், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் கொண்ட பறக்கும் படையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.