உலகப் புகழ்ப்பெற்ற இலக்கியத்திற்கான புக்கர் விருது ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த புதினத்துக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு இந்திய எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீ புக்கர் விருதை முதன்முறையாக பெற்றுள்ளார். தலைநகர் டெல்லியைச் சேர்ந்த கீதாஞ்சலி ஸ்ரீ, ஏராளமான சிறுகதைகளையும், 5 புதினங்களையும் எழுதியுள்ளார். இவர் இந்தியில் எழுதிய சிவப்பு சமாதி என்ற புதினம், டெய்சி ராக்வெல் என்பவரால் ஆங்கிலத்தில் Tomb of Sand என்ற பெயரில் மொழிப்பெயர்க்கப்பட்டது. இந்த புதினத்தில் இந்திய பிரிவினையின்போது கணவனை இழந்த வயோதிக பெண் ஒருவரின் நிலை விவரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2022ஆம் ஆண்டுக்கான புக்கர் விருதுக்கு கீதாஞ்சலியின் Tomb of Sand புனிதம் தேர்வு செய்யப்பட்டு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.