15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 58ஆவது லீக் ஆட்டத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரிஷாப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. நேற்று மாலை 7.30 மணிக்கு நவி மும்பை டாக்டர் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தபோட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய டெல்லி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து ஆட்டத்தை கைப்பற்றியது. இந்தத்தொடரில் டெல்லி அணிக்கு இது 6ஆவது வெற்றியாகும். இதுவரை இந்ததொடரில் 12 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயம், டெல்லி அணி விளையாடிய 12 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 5ஆவது உள்ளது.