15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 47ஆவது லீக் ஆட்டத்தில், இன்று ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்க்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 3 ஆட்டத்தில் வெற்றியும், 6 ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி இதுவரை போட்டியிட்ட 9 ஆட்டங்களில் 6 ஆட்டங்களில் வெற்றியும், 3 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்துள்ளது. மேலும், இதுவரை கொல்கத்தா அணியுடன் ராஜஸ்தான் அணி 25 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்து எதிர்க்கொண்டுள்ளது. அதில், 13 போட்டிகளில் கொல்கத்தா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டையாகி உள்ளது. 10 போட்டிகளில் மட்டுமே ராஜஸ்தான் வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் கொல்கத்தாவே இந்தபோட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அதன் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ராஜஸ்தான் இந்ததொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே இரண்டு அணியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.