காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை அரியானாவை சேர்ந்த பெண் விவசாயிகள் சந்தித்து உரையாடினர். அப்போது ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று சோனியா காந்தியிடம் பெண் விவசாயி ஒருவர் கூறி உள்ளார். அதை கேட்ட சோனியா காந்தி நகைச்சுவையாக ‘நீங்களே பெண் பாருங்கள்” என்று கூறி உள்ளார். இதை கேட்டு மற்ற பெண் விவசாயிகள் சிரிக்க தொடங்கினர்.