நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியின் உயர்ந்த எண்ணங்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறார், உத்தரகாண்ட் மாநிலம் தாலன்வாலா பகுதியைச் சேர்ந்த மூதாட்டி புஷ்பா முன்ஜியால். இதற்காக அவர், ராகுலை தன் சொத்தின் வாரிசாக மாற்றியுள்ளார். இவரிடம் உள்ள சொத்துகளை ராகுல் காந்திக்கு கொடுப்பதாக உயில் எழுதிவைத்துவிட்டு, அதை டேராடூன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மூதாட்டி புஷ்பா முன்ஜியாவிடம் வங்கியில் ரூ.50 லட்சம் பணம், 10 சவரன் தங்கம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.