மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2022ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த எழுத்துத் தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 5 முதல் மே 26ஆம் தேதி வரை நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் தற்போது, இந்த தேர்வில் பங்கேற்றவர்களின் இறுதித் தேர்வு முடிவுகள் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் தேர்வெழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதில், உத்திர பிரதேசத்தை சேர்ந்த சுருதி ஷர்மா என்ற பெண் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவரை அடுத்து இரண்டாவது இடத்தை அங்கிதா அகர்வால் மற்றும் மூன்றாவது இடத்தை காமினி சிங்லா ஆகியோர் பிடித்துள்ளனர். 2021ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்குள் யுபிஎஸ்சி இணையதளத்தில், தேர்ச்சி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்படும்.