கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் சிலதினங்களுக்கு முன்பு பாஜகவினர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டினர். இதனையடுத்து அங்கு வந்த திமுக கவுன்சிலர் கனகராஜ் பிரதமர் மோடி படத்தை அகற்றினார். இதைத்தொடர்ந்து, இன்று திமுக கவுன்சிலர் கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் கதவுகளை மூடினர். இதனால் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக திமுக கவுன்சிலர் பிரதமர் மோடியின் படத்தை அகற்றும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.