ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர், இன்று இரவு 7.30 மணிக்கு புனே நடைபெற உள்ளது. 14ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது. 5முறை சாம்பியனான மும்பை அணி இந்தத்தொடரில், தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. அந்தவகையில் மும்பை அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இந்தநிலையில், இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் மும்பை அணி உள்ளது. தவிர, இன்றைய ஆட்டத்தில் மும்பை தோற்றால் வரும் போட்டிகளில் நெருக்கடியுடன் களம் இறங்கும் சூழல் உண்டாகும். அதேபோல், கொல்கத்தா அணி விளையாடிய 3 ஆட்டத்தில் 2 வெற்றியை பெற்றுள்ளது. அந்த அணி 3ஆவது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.