மதுரை மாநகராட்சியின் முதல் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது வந்த அ,தி.மு.க. கவுன்சிலர்களுக்கு கடைசிப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சோலை ராஜாவும் அதிமுக கவுன்சிலர்களும் மையப்பகுதிக்குச் சென்று மேயரை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்து கோஷத்தில் அவர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர், கோஷங்கள் இட்டபடி கூட்டத்திலிருந்து சோலை ராஜா தலைமையில் அ,தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.