தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான பிலிப்பைன்ஸில் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் ‘மேகி’ சூறாவளி தாக்கியது. இதனால், பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பாய்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், நகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதி துண்டிக்கப்பட்டதால் 17,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த பாதிப்பில் சிக்கி நூற்றுக்கணக்காணோர் காயமடைந்துள்ளனர். 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அங்கு நிலவும் மேசமான வானிலை காரணமாக மீட்புப்பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சராசரியாக பிலிப்பைன்ஸ் ஒவ்வொரு ஆண்டும் 20 புயல்களால் தாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.