வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்மாங்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி(67). இவர் கடந்த 21ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் முதியவர் மீது வேகமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவர் வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், திடீரென மூளை சாவு ஏற்பட்டதால் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். இதனையடுத்து, முதியவரின் இருதயம் மற்றும் ஒரு சிறுநீரகத்தை சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் இரு கண்களை வேலூர் சிஎம்.சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கினார்.