புனேவில் நடைபெறும் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஐ.பி.எல்., போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்க்கொள்கிறது. 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் 3 ஆட்டங்களில் அதாவது டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக தோற்று புள்ளி பட்டியலில் பின்தங்கி நிற்கிறது. ஆனால், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணியோ கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் 2 வெற்றிகளையும், பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் நல்ல நிலையில் உள்ளது. இந்தநிலையில் சரிவில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி மீள வேண்டும் என்று அந்த அணியில் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். முன்னதாக இந்த இரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 17 ஆட்டத்தில் மும்பையும், 11 ஆட்டத்தில் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது.