15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 52ஆவது லீக் ஆட்டத்தில், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. இன்று மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதுவரை பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் நேருக்கு நேர் 23 ஆட்டங்களில் சந்தித்துள்ளன. அதில், 9 ஆட்டங்களில் பஞ்சாப் அணியும் 13 ஆட்டங்களில் ராஜஸ்தான் அணியும் வெற்றிப்பெற்றுள்ளது. மேலும் ஒரு ஆட்டம் டை ஆகி உள்ளது. இந்ததொடரில் 10 ஆட்டங்களில் போட்டியிட்டு உள்ள பஞ்சாப் அணி 5 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி, புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை இந்ததொடரில் விளையாடிய 10 ஆட்டங்களில் 6 ஆட்டத்தில் வெற்றியும், 4 ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தநிலையில், இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக முந்தைய ஆட்ட தரவுகளும், தற்போதைய கணிப்பும் கூறுகிறது.