15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை, வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி எதிர் கொண்டது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இந்தபோட்டியில், முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, முதலில் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வென்றது. இதன்மூலம், புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்தில் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதுவரை இந்ததொடரில் 10 ஆட்டங்களில் போட்டியிட்டு உள்ள டெல்லி அணி 5 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி உள்ளது. ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் 5 ஆட்டத்தில் வெற்றியும், 5 ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது.