15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை, வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி எதிர்க்கொள்ள இருக்கிறது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இந்தபோட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற உள்ளது. இந்ததொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை இந்ததொடரில் 9 ஆட்டங்களில் போட்டியிட்டு உள்ள டெல்லி அணி 4 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி உள்ளது. ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 5 ஆட்டத்தில் வெற்றியும், 4 ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளது. மேலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி நேருக்கு நேர் 20 போட்டிகளில் சந்தித்து உள்ளது. இதில், 8 போட்டிகளில் டெல்லி அணி வெற்றிப்பெற்றுள்ளது. ஐதராபாத் அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டை ஆகி உள்ளது. இதன்படி, பார்க்கும் போது இந்தஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிப்பெற சமமான வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். எனினும் டெல்லி இந்த ஆட்டத்தில் வென்று முன்னேற அதிக முயற்சி செய்யும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.