சீனாவின் ஷாங்காயில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஷாங்காய் நகரில் பெரும்பாலான கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேற கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தம்பதிகள் ஒன்றாக உறங்க, முத்தமிட, கட்டியணைக்க, ஒன்றாக அமர்ந்து உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை ஊழியர்கள் ஒலிப்பெருக்கி மூலம் இதுகுறித்த அறிவிப்பை தெருக்கள்தோறும் அறிவுறுத்தி வருகிறார்கள்.