15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப்போட்டி, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு நடைப்பெற்றது. இந்தப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, குஜராத் அணி பந்து வீச்சில் தனது ஆட்டத்தை தொடங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது. இந்த வெற்றியின் மூலம் தொடரை குஜராத் அணி கைப்பற்றியது. இந்தத்தொடரில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குஜராத் அணி இறுதிப்போட்டியிலும் நல்ல முறையில் விளையாடி அறிமுக தொடரிலே கோப்பையையும் கைப்பற்றிய மகிழ்ச்சியில் குஜராத் அணியும் அந்த அணி ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.