முகச்சுருக்கம் தவிர்க்க முடியாதது ஆனால் சில தடுப்பு முறைகளைக் கையாள்வதால் முகச்சுருக்கம் ஏற்படுவதை தள்ளிப்போட முடியும் என்றே தோல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
7 வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நிச்சயம் முகச்சுருக்கம் வருவதை தள்ளிப் போட முடியும்.
நேரடியாக சூரிய வெப்பம் நமது உடலில் படும்போது வெகுவிரைவில் தோல் சுருக்கமும், வயது முதிர்வும் ஏற்படுகிறது ஆகவே வெயிலில் செல்வதற்கு முன் சன் ஸ்கிரீன் லோஷன் தடவிக் கொள்வது சூரிய கதிர்களிலிருந்து பாதுகாப்பைத் தருகிறது.
பல வயதான பெண்கள் முகம் கழுவும் பழக்கத்தை கடைபிடிக்க மறந்து விடுகின்றனர். முகம் கழுவுவதால் தோல் வறட்சி உண்டாகும் என்ற தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். அனால் முகத்தில் உள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்தவும், அழுக்குகளை களையவும் மென்மையான சோப்பு அல்லது கிரீம்களை பயன்படுத்தி முகத்தை கழுவி வருவதால் முகம் புத்துணர்ச்சி பெற்று இளைமையாகத் தோற்றமளிக்கும் .
தினமும் முகத்திற்கு மாய்சரைசிங் கிரீம் பயன்படுத்துவது சிறந்தது. இது முகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும். இரவு படுக்கைக்கு செல்லும் முன் மாய்சரைசிங் கிரீம் அல்லது “நைட் கிரீம்” பயன்படுத்தி வருவதால் முகத்தில் ஏற்படும் வறட்சி மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும்.
வாரம் ஒருமுறை முகத்திற்கு ஸ்க்ரப் பயன்படுத்தினால் இறந்த செல்கள் மறைந்து முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பளிச்சென்று காணப்படும்.
மாதம் ஒருமுறை ஃபேஷியல் செய்து வருவது, ஆன்டி ஏஜ் கிரீம் பயன்படுத்துவது சருமத்திற்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கும்.
கண்களைக் சுற்றியுள்ள தோல்பகுதி மிகவும் மெலிதாகவும், மென்மையாகவும் இருக்கும் இப்பகுதியில் ஏற்படும் சுருக்கம் வயதை எளிதில் காட்டிக்கொடுத்துவிடும். கண்களை சுற்றி கிரீம்கள் போடும்போது மென்மையாக தடவுவது அவசியம். ,முடிந்தால் கண்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் கிரீம்கள் உபயோகிப்பது சிறந்தது.
பல மேக்கப் கிரீம்களில் தற்போது சன் ஸ்கிரீன் மற்றும் சரும பாதுகாப்பு, முகச்சுருக்கங்களை தாமதப்படுத்தும் கெமிக்கல் கலந்தவையாகவே இருக்கிறது. அதே நேரத்தில் சிறந்த பாதுகாப்பான பிராண்டுகள் குறித்த ஆய்வுக்குப் பின்பே பயன்படுத்துவது நல்லது. கடைகளில் விற்கக்கூடிய அனைத்து அழகு சாதனப் பொருட்களும் பாதுகாப்பானது அல்ல. விளம்பரங்களை மட்டுமே பார்த்து கிரீம்கள் வாங்குவதைத்தவிர்ப்பது நல்லது.
மேற்கண்ட வழிமுறைகளைத் தொடர்ந்து கடைபிடித்தால் முகச்சுருக்கம் இல்லாத இளமையான சருமத்தை பெற்றுக் கொள்ளலாம்.