மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளான இன்று, விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி, காலை 10.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. மேலும், பக்தர்கள் அனைவரும் காலை 07.00 மணி முதலே மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கோபுர நுழைவு வாசல்களில் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்பு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் செல்போன் உட்பட எந்தப்பொருட்களையும் எடுத்து வர அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தவிர, திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பின்பு பக்தர்கள் வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வழியாக வெளியே செல்ல வேண்டும் எனவும், பக்தர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கோவில் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.