திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் 5 அலகுகள் உள்ளது. இதில், முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2ஆவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில், இரண்டாவது நிலையின் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக தற்போது அங்கு 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி சரிந்து வரும் நிலையில் அடிக்கடி ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளால் மின் உற்பத்தி மேலும் பாதிக்கப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.