ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி 3வது வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்குக் களம் அமைத்துக் கொடுத்தவர் பேட் கம்மின்ஸ். இவருடைய ஆட்டம் அதிரடியாக இருந்தது. கம்மின்ஸ் 14 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரை சதம் எடுத்து, ஐபிஎல்லில் லோகேஷ் ராகுல் சாதனையை சமன் செய்தார். இந்த சாதனை குறித்து அவர், ‘இந்த சீசனில் நான் பங்கேற்ற முதல் ஆட்டத்திலேயே அதிரடியான விளையாடியது ஆச்சரியமானது. உண்மையிலேயே எனது ஆட்டம் திருப்தி அளிக்கிறது. கடந்த ஆண்டைப் போலவே அணியின் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது அதிர்ஷ்டம்தான். ஒட்டுமொத்தத்தில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்’ என்றார்.