கனடாவில் மான்களைத் தாக்கக்கூடிய விசித்திரமான ஒரு தொற்றுநோய் பரவி வருகிறது. இதன் பெயர் ஜோம்பி எனச் சொல்லப்படுகிறது. இது, கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்வெசன் ஆகிய மாகாணங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நோயால் மான் வகையறாக்களான எல்க், கலைமான், சிகா மான் மற்றும் மூஸ் ஆகியன அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. இந்த நோய்க்கு சிகிச்சையோ அல்லது தடுப்பூசிகளோ எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஜோம்பி நோயால் பாதிக்கப்பட்ட மானைச் சாப்பிடுவதன் மூலம் மக்களுக்கும் இந்த நோய் பரவும் எனவும் கூறப்படுகிறது.