திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த சீமாபுரத்தில் இருந்து தடம் எண் 114S என்ற மாநகர பேருந்து கோயம்பேடுக்கு இயக்கப்படுகிறது. இந்த பேருந்து சிறுணியம் கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, பேருந்துக்கு பின்னே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடவில்லை எனக்கூறி மர்ம நபர்கள் பேருந்தின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளை கத்தியால் அடித்து உடைத்தனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களுடன் ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் அச்சமடைந்து, சம்பவம் குறித்து சோழவரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையை அடுத்து பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த 6 இளைஞர்களை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.