சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29 வயது மாணவி, ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். அவரை, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அதேதுறையில் ஆராய்ச்சிப்படிப்பு படித்து வந்த மாணவர்கள், துறையின் Co-Guides மற்றும் பேராசிரியர் என 9 பேர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைகளை செய்ததாக புகார் அளித்தார். உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் பேராசியர்கள் மீது மாணவி அளித்த இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் 2 பேராசிரியர்கள் உள்பட 7 பேர் மீது காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.