9வது ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்கும் 15 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா, ஜிம்பாப்வே, ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா ‘சி’ பிரிவில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, தென் கொரியா, உருகுவே, ஆஸ்திரியா, ‘டி’ பிரிவில் ஜெர்மனி, இந்தியா, மலேசியா, வேல்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி தனது லீக் ஆட்டத்தில் இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது.