உக்ரைன் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அந்த நாட்டின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவில் கடந்த சில தினங்களாக ரஷ்யா படையினர் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதலில் 18 பேர் உயிரிந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்தநாட்டு அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். முன்னதாக, கார்கிவ் நகரில் ரஷ்ய படை தாக்குதல் நடத்தி கொண்டு இருந்த போது கிடைத்த சிறிய இடைவேளியில் காயமடைந்த பொதுமக்களுக்கு மீட்புப் படையினர் சிகிச்சை அளிக்கும் காட்சி வெளியாகி உள்ளது. அந்த காட்சியில், சிறிய இடைவெளிக்கு பிறகு, ரஷ்யா படையினர் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கி உள்ளனர். அந்ததருணத்தில், காயமடைந்த பெண்ணுக்கு சிசிச்சை அளித்து வந்த துணிச்சலான மருத்துவர் ஒருவர் மட்டும், இருந்த இடத்தில் இருந்து கூட நகர்ந்து செல்ல முடியாமல் இருந்த ஒரு பெண்னை, மருத்துவர் அரவணைத்து பாதுகாத்தப்படி இருந்துள்ளார். மேலும், அவர் மற்ற காயமடைந்தவர்களிடம், “எழுந்திராதே!” என்று உரத்த குரலில் கூறி தாக்குதலில் இருந்து மற்றவர்களும் தப்பிக்க உதவிய காட்சிகள் வெளியாகி உள்ளது. ரஷ்யா மீது உக்ரைன் தொடுத்துள்ள போரால் மக்கள் அடையும் வலியும் வேதனையும் இந்த காட்சி எடுத்துக்கூறுகிறது.