குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திடங்களை தொடங்கி வைக்க சென்றுள்ளார். அதன்படி, ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் ”பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்திய அரசு, மக்களுக்கான தனது சேவையை தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவடைந்து 9 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல ஆண்டுகளாக ‘அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை’ என்ற மந்திரத்தை பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளோம். அரசின் திட்டங்களை 100 சதவீதம் குடிமக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான பிரச்சாரத்தை பா.ஜ.க., அரசு நடத்தி வருகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் வசதிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டால், நாட்டில் பாகுபாடும் முடிவுக்கு வரும், ஊழலுக்கு வாய்ப்பில்லாமல் போகும் என அவர் பேசினார்.