மதுவந்தியின் வீடு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் ‘மதுவந்தியை ட்ரோல் செய்யாதீர்கள்’ என்று மன நல மருத்துவர் டாக்டர் ஷாலினி வலியுறுத்தியுள்ளார்.
ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் வசித்து வருகிறார் மதுவந்தி. அவர் இந்த வீட்டிற்காக வாங்கிய கடனை கட்டாததால் நீதிமன்றத்தில் வங்கி சார்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர் . வழக்கை விசாரித்த நீதிமன்றம் வீட்டை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது . நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து வங்கி ஊழியர்கள் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். அப்போது அங்கே வந்த மதுவந்தி வங்கி ஊழியர்களிடம் கெஞ்சியுள்ளார். அது குறித்த வீடியோ லீக் ஆன நிலையில் மதுவந்தியை பலரும் ட்ரோல் செய்து அந்த வீடியயோவை பகிர்ந்தனர். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக விவாதம் எழுந்த நிலையில் மதுவந்தியை ட்ரோல் செய்யாதீர்கள் என்று மனநல மருத்துவர் ஷாலினி வலியுறுத்தியுள்ளார்.
அவருடைய பேஸ்புக் பதிவில்”திருமதி மதுவந்தி அவர்கள் ஒரு தனிப்பெண் என்றும் ஒற்றை பெற்றோர் என்றும் அவரை இவ்வாறு பரிகாசம் செய்யாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு முன் அவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தற்பெருமை பேசியது, சவடால் அடித்தது, அலப்பறை செய்தது உள்ளிட்ட அனைத்தும் நமக்கு கடுப்பேற்றினாலும், அவை எல்லாமே பக்குவம் இல்லாததன் வெளிப்பாடே ஆகும் என்று கூறியுள்ளார்.இப்போது அவருக்கு ஓர் இன்னல், பணக்கஷ்டம் என்றதும், இது தான் சமயம் என்று அவரை பரிகாசமாய் ட்ரோல் செய்வது அநாகரீகமானது என்றும் இது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல் என்றும் தெரிவித்துள்ளார். அவருக்கும் வங்கிக்காரர்களுக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் எப்படி வெளியே கசிந்தது? தன் சொந்த சித்தப்பா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூட உதவிக்கேட்காமல், தனியாக கைக்கூப்பி நிற்கும் ஒரு பெண்ணின் துயரை பரிகாசம் செய்வதா தமிழ் பண்பு? என்றும் துன்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு மேலும் துன்பம் கொடுப்பதுதான் தமிழர் மரபா என்றும் ஷாலினி கேள்வி எழுப்பியுள்ளார்.