மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. வருகிற 14ம் தேதி மகாவீர் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் உரிமம் பெற்ற ஓட்டல், கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அன்று மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. இதனை மீறி நடப்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.