மண்வளம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 30,000 கி.மீ. மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தை அவர், மார்ச் 21ம் தேதி லண்டனிலிருந்து தொடங்கினார். அதன் ஒரு பகுதியான ஜெர்மனி சென்ற அவர், அங்குள்ள ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் (UNCCD) தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். ‘மண் என்பது வற்றாத ஒரு பயன்பாட்டு பொருள் அல்ல; அது நம் வாழ்வின் ஆதாரம். இந்த விழிப்புணர்வுடன் மண்வளப் பாதுகாப்பை நாம் மேம்படுத்த வேண்டும்’ என்று பேசினார். தொடர்ந்து மண்வள விழிப்புணர்வுக்காக செக் குடியரசு, ஆஸ்திரியா, ஸ்லோவினியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். இறுதியில் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வர உள்ளார். முன்னதாக ஜெர்மனி, அலுவலகத்தில் அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.