பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் தோல்வி அடைந்ததை அடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக இம்ரான்கான் கட்சி நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. இந்தநிலையில் பெஷாவரில் நடந்த பேரணியில் பேசிய இம்ரான் கான் ’நள்ளிரவில் நீதிமன்ற அறையை திறந்து விசாரணை நடத்தியது ஏன் என நீதித்துறையை கேள்விக்கேட்டுள்ளார். கடந்த 45 ஆண்டுகளாக பாகிஸ்தான் மக்களுக்கு தன்னை பற்றி தெரியும் என்றும் எப்போதாவது சட்டத்தை மீறி உள்ளேனா என்று பொதுமக்களிடம் கேட்டுள்ளார். மேலும் தான் ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருந்த போது கூட, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டுள்ளதாக எவராவது குற்றம் சாட்டியுள்ளனரா என்று கேட்டுள்ளார். மேலும் பேசிய அவர், முன்பெல்லாம் பிரதமர் பதவியில் இருந்து ஒருவர் நீக்கப்படும்போது, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடக்கும். ஆனால், தற்போது போராட்டம் தான் நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் உதவியுடன், ஆட்சிக்கவிழ்ப்புக்கான சதி வாஷிங்டன்னில் நடந்ததாகவும், தான் ஆட்சியில் இருந்த போது, யாருக்கும் ஆபத்தானவனாக இருந்தது இல்லை என்றும் ஆனால், தற்போது அப்படி இருக்காது என்றும் கூறியுள்ளார். ஷெபாஸ் ஷெரீப்புக்கு எதிராக 40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் வழக்கு உள்ளதாகவும், அவரை பிரதமராக நாம் ஏற்று கொள்வோமா? என்று இம்ரான் கான் பேசியுள்ளார்.