இந்திய மகளிர் கிரிக்கெட்டில் முன்னணி வீராங்கனையாக இருப்பவர் மிதாலிராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் எப்படி சச்சின் சாதனை படைத்திருந்தாரோ அதே போன்று பெண்கள் கிரிக்கெட்டில் அவர் சாதனைகளை படைத்துள்ளார்.
இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 63 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 20 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைத்தார்.
38 வயதான மிதாலிராஜ் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் அரை சதம் விளாசி சாதித்து உள்ளார். அவர் 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,367 ரன்கள் எடுத்து உள்ளார். இதில் 7 சதமும், 59 அரை சதமும் அடங்கும்.நேற்றைய போட்டியின் மூலம் அவர் 59-வது அரை சதத்தை தொட்டார். அவரது சராசரி 51.88 ஆகும்.
ராஜஸ்தானில் துரைராஜ்-லீலா தம்பதியருக்கு பிறந்த மிதாலி ராஜ் ஐதாராபாத்தில் குடியயேறினார். பிறந்தது ராஜஸ்தானாக இருந்தாலும்,அவருடைய தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மிதாலிராஜ் வருகைக்கு பிறகே சாதிக்கத் தொடங்கியது. 1999-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அவர்.20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு அவர் ஓய்வு பெறப்போவதாக கூறப்படுகிறது.