தெலுங்கானா மாநிலம் சூர்யபேட்டை பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர், தனது 15 வயது மகனை மின்சார கம்பத்தில் கட்டிவைத்து மிளகாய்ப் பொடியை முகத்தில் வலுக்கட்டாயமாகப் பூசும் காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘கடந்த ஒரு வருடமாக போதைக்கு அடிமையாகி இருக்கும் தன் மகனிடம் எவ்வளவு எடுத்துக்கூறியும் அவன் போதைப் பழக்கத்தை விடுவதாக இல்லை. அதனாலேயே இப்படி செய்ய வேண்டியிருந்தது’ என அவரின் தாய் தெரிவித்துள்ளார். இளம் சமுதாயத்தினரை, போதைப்பழக்கம் அதளபாதாளத்துக்கு தள்ளிவருவதாக பலர் குரல் கொடுத்துவந்தாலும் அரசே அனுமதி அளித்து டாஸ்மாக்குகளை நடத்துவதை நிறுத்தும்வரை இந்த நிலை மாறப்போவதில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.