15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 51ஆவது லீக் ஆட்டத்தில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தபோட்டி நடைபெற இருக்கிறது. இந்ததொடரில் 10 ஆட்டங்களில் போட்டியிட்டு உள்ள குஜராத் அணி 8 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியையும் தழுவி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 1 ஆட்டத்தில் வெற்றியும், 8 ஆட்டத்தில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 8 ஆட்டங்களில் தோற்றுள்ளதால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. எனினும், அறிமுக அணியான குரஜாத் முந்தைய பஞ்சாப் உடனான ஆட்டத்திலேயே ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்ல முயன்று அது முடியாமல் போனதால், இந்த முறையேனும் அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறும் முயற்சியில் உள்ளது.