உக்ரைன் மீது ரஷிய ராணுவம் 47ஆவது நாளாக போர் நடத்தி வருகிறது. இதன்விளைவாக கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்டதைவிடப் பெரிய அளவிலான பொருளாதார சேதம் ஏற்படும் என்று கணித்துள்ள உலக வங்கி போரின் விளைவாக இந்த ஆண்டு உக்ரைனின் பொருளாதாரம் 45 சதவீதம் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கிறது. மேலும், ரஷியா மீது பல்வேறு நாடுகள் தொடுத்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்ய பொருளாதாரம் மந்தநிலைக்கு வழிவகுத்துள்ளது. எனவே, இந்த ஆண்டு ரஷியா 11 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.