திருவனந்தபுரம் அருகே பேத்தியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்திய தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் விளப்பில்சாலா பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை 70 வயதுடைய அவருடைய தாத்தா பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அந்த சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் . அப்போது சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் ‘தாம் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக’ கூறியுள்ளார். இதையடுத்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து 70 முதியவரை கைது செய்துள்ளனர்.