பாலினச் சமத்துவமே பெண் சுதந்திரத்தின் ஆணிவேர். இறைவன் படைப்பில் ஆணும், பெண்ணும் சமமானவர்களே. அத்தகைய எண்ணம் பலரிடம் இல்லாமல் போனதே பெண்ணடிமைத்தனத்துக்குக் காரணம். ஒவ்வொரு பெண்ணின் ஆசையும், தேடலும், கனவும் ஆணாதிக்கத்தால் நிறைவேறாமல் போகின்றன. சற்றேனும் அதில் மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சியாக, பெண்களின் நலன் சார்ந்த விஷயங்கள், சாதிக்கும் பெண்களைப் பற்றிய தன்னம்பிக்கைக் கட்டுரைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு நேர்காணல்கள் போன்றவற்றை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘பெண்களின் குரல்’ மாத இதழ்.
இது மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு சரியாக இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உலகெங்கும் தமிழ் பேசும் மூலை முடுக்கெல்லாம் டிஜிட்டல் வழியாகப் பெண்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘பெண்களின் குரல் ஆப்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இணையதளம் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் வழியாகவும் செயல்பட்டுவந்த ‘பெண்களின் குரல்’ தற்போது ‘ஆப்’ (App) வடிவிலும் வெளியாகிறது.
இதில் நாட்டு நடப்பு, சினிமா, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, சுயதொழில் என்று ஏராளமான தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெறும். சிறுகதை, தொடர்கதை, கவிதை என்று இலக்கிய அனுபவத்துக்கும் குறை இருக்காது. பெண்களின் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மருத்துவ ஆலோசனைகளும் வெளியாகும். பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் களமாகவும் ‘பெண்களின் குரல் ஆப்’ விளங்கும். சாதனைப் பெண்களின் பேட்டி, வீடியோ வடிவிலும் வெளியாகும்.
பெண்களின் குரல் மாத இதழை இந்த ‘ஆப்’ மூலம் டிஜிட்டல் வடிவில் சலுகை விலையில் வாசிக்கலாம். சந்தாவுக்கும் சலுகை உண்டு. ‘பெண்களின் குரல்’ இதழுக்கு அளித்துவரும் ஆதரவைப் போலவே ‘பெண்களின் குரல் ஆப்’-க்கும் தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவைத் தாருங்கள். பெண்ணினத்தின் மேம்பாடு, வளர்ச்சி, கல்வி, சமத்துவம், பெண்ணுரிமை உள்ளிட்டவற்றுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்புவோம்.
‘பெண்களின் குரல்’ சமூக அக்கறையோடு பெண்களுடைய பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்காகத் தொடங்கப்பட்ட இதழாகும். இதில் வரும் நடுநிலை செய்திகள், கட்டுரைகள் போன்றவற்றை இனி ‘ஆப்’ மூலம் படித்துப் பயன்பெறுங்கள். டிஜிட்டலில் படிக்க பெண்களின் குரல் ‘ஆப்’ஐ இப்போதே டவுன்லோடு செய்யுங்கள்.