பெண்களின் குரல் ( வாய்ஸ் ஆஃப் உமன்) என்ற பெயருக்கு ஏற்றார் போல், பாதிக்கப்படும், உதவி தேவைப்படும் பெண்களுக்கு குரலாக பெண்களின் குரல் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
பாலியல் ரீதியாக பெண்களும், பெண் குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெண் குழந்தைகள் தமது சொந்த குடும்பத்தினரால், அண்டை வீட்டினரால், பொது இடங்களில், பணிபுரியும் இடங்களில் என பல நேரத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
இத்தகைய தவறுகள் நடைபெறுவதை வீட்டில் அல்லது பொது வெளியில் சொல்லக்கூட அச்சப்படும் நிலையில்தான் பெண்கள் இருக்கின்றனர்.துணிவாக வெளியில் சொல்லும் பெண்கள் மீது மீண்டும் அவமானப்படுத்தும் விதமான விமர்சனங்களும், எதிர் கேள்விகளுமே கேட்கப்படுகின்றன.
ஒரு பெண்ணை பலமிழக்க செய்யும் ஆயுதமாக பலநேரங்களில் இட்டுக்கட்டி ஜோடித்த கதைகளால் அவளது நடத்தையை விமர்சித்து, அவளது திறமைகளை முடக்கிப் போட இச்சமுதாயம் முயற்சிக்கிறது.
நாட்டில் பாதுகாப்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்புகிறோம். ஆனால் பெண்கள் தமது வீடுகளில் கணவர்களால் அடித்து துன்புறுத்தப் படுவதையும், வார்த்தைகளால் துன்புறுத்த படுவதையும், வார்த்தைகளால் துன்புறுத்தி மனரீதியான பாதிப்பை உண்டு பண்ணும் நிலையையும் பல படித்த கணவர்கள் கூட மேற்கொள்வது வருந்தத்தக்கது.
இப்படி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மிகச்சாதாரணமாகக்கடந்து போகும் பெண்களுக்கு விழிப்புணர்வுவை உண்டாக்கி, பெண்களுக்கான பாதுகாப்பு, பெண் உரிமை , பாலின சமத்துவம் குறித்த தொடர் விழிப்புணர்வு கூட்டங்களை, கிராமங்கள் தோறும் தொடர்ச்சியாகச் சென்று, பெண்களின் குரல் அமைப்பு நடத்திவருகிறது .
இக்கூட்டங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, பறை இசைத்து அதன் வாயிலாக பெண்களுக்கான விழிப்புணர்ச்சியை உருவாக்குவது, விருப்பப்படுகிற பெண்களை பெண்களின் குரல் (வாய்ஸ் ஆப் உமன்) அமைப்பில் உறுப்பினராக்கி, அப்பெண்களுக்கு உதவிகள் செய்து வருவதை சிறப்புடன் மேற்கொண்டு வருகிறது.
WEBSITE – WWW.VOWINDIA.ORG
CONTACT – 9600046673