ஆப்கானிஸ்தானில்தானிபான்களுக்கு எதிராகப் போராடி வரும் பெண்களின் உரிமைகளை மதிக்குமாறு ஐக்கியநாடுகள் சபை எச்சரிக்கை கொடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் எது நடக்கக்கூடாது என்று உலக நாடுகள் பயந்துக் கொண்டிருந்ததோ,அது அங்கு தற்போது நடந்தேறியுள்ளது.20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.இந்த நடவடிக்கையால்,அங்குள்ள பெண்கள் குழந்தைகளின் நிலை என்ன ஆகுமோ என்றிருந்த நிலையில்,தற்போது அவர்களை வதைக்கும் சூழல் அங்கு உருவாகியுள்ளது.எதிர்ப்பு,வன்முறை இல்லாத அமைதியான வாழ்கையை வாழ வேண்டு என்று போராடி வரும் பெண்களை தாலிபான் சித்ரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.தாலிபான்களின் இந்த நடவடிக்கையை ஐக்கியநாடுகள் சபையின் பெண்களுக்கான பொறுப்பாளர் பிரமிளா பட்டேனை வன்மையாக கண்டித்துள்ளார்.
“தாலிபான்களுக்கு எதிராக போராடி வரும் பெண்களை கட்டி வைத்து சவுக்கடிகொடுப்பது அவர்கள் மீது தடியடி நடத்துவதுபோன்ற புகைப்படங்களை கண்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.ஆப்கானிஸ்தானில் பெண்களும்,குழந்தைகளும் அமைதியாக வாழ்வதற்கு உரிமை உள்ளது.அந்தஅமைதி அங்கு இல்லாதபோது அவர்கள்போராடத்தான் செய்வார்கள்.அவர்களுடைய அந்தப் போராட்டம் நியாயமானது அது அவர்களது உரிமையும் கூட,அதை ஒடுக்குவதும்,அவர்களை துன்புறுத்துவதும் கண்டிக்கத்தக்கது.ஆப்கானிஸ்தானில் போராடி வரும் பெண்களின் உரிமைகளை மதித்து செயல்படுங்கள்”என்று தாலிபான் அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.
மேலும் பேசியவர்”தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிவரும் பெண்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை துணையாக இருக்கும் என்று கூறியவர் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.அங்குள்ள பெண்கள் பாதிக்கப்பட்டால் ஐக்கியநாடுகள் சபை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது உரிய விசாரைணையை மேற்கொள்ளும்” என்று எச்சரித்துள்ளார்.