பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்தநிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85 பைசாவுக்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.100.94 பைசாவுக்கும் விற்பனையாகின. முன்னதாக ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், இந்தியாவிலும் மூலப்பொருள் விலை உயர்வை அடுத்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டடு வருகிறது. எனினும், 8 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது.