800 ஆண்டுகள் பழைமையான பெங்களூரு கரக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 11 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவுக்கு பெங்களூரு மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற 12ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கின்றன. 14ம் தேதி இரவு 10 மணிக்கு பச்சை கரக நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.