15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 60ஆவது லீக் ஆட்டத்தில், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியுடன் மோத உள்ளது. இன்று மாலை 7.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த ஆட்டத்தில் 30ஆவது முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோத இருக்கிறது. இதுவரை இருஅணிகளும் இணைந்து விளையாடிய 29 போட்டிகளில் 13 போட்டிகளில் பெங்களூரு அணியும், 16 போட்டிகளில் பஞ்சாப் அணி வெற்றிப்பெற்றுள்ளது. அதேபோல, இதுவரை இந்ததொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 7 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயம், பஞ்சாப் அணி விளையாடிய 11 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. ஆகவே, முந்தைய போட்டி தரவுகளையும் தற்போதைய ஆட்டநிலைமையையும் பார்க்கும் போது பஞ்சாப் அணியே இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் பெங்களூரு அணியே வெல்லும் என்று பேசி வருகின்றனர். எனவே, இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்று பார்க்க ஐபிஎல் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.