நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றி உள்ள வனப்பகுதிகளில் பல ஏக்கர்களில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளது. இந்ததேயிலைத் தோட்டங்களில் யானை, சிறுத்தை, கரடி உள்பட சில வனவிலங்குகள் நடமாட்டம் சமீபகாலமாகவே அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கூடலூர் அருகே பொலம்பட்டி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எப்போதும் போல பணிக்கு சென்றுள்ளனர். அப்போது தேயிலைத் தோட்டத்தில் நீண்ட நேரம் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, சத்தம் கேட்ட இடத்துக்குச்சென்று பார்த்த தொழிலாளர்கள் பிறந்து ஒரு மாதமே ஆன சிறுத்தை குட்டியை கண்டெடுத்துள்ளனர். இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு தாய் சிறுத்தை சுற்றித்திரியும் பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். முன்னதாக, சிறுத்தை குட்டியை பூனைக்குட்டி என்று நினைத்து மீட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளர்.