புவியியல் தகவல் அமைப்பு வரைபடம் என்பது கணனியின் உதவியுடன் இடம்சார்ந்த தரவுகளைக் கையாளுகின்ற ஒரு முறைமையாகும். இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கூறுகளின் இணைப்பு மற்றும் இடைத் தொடர்பினால் உருவானவையே தொகுதி அல்லது முறைமை எனப்படுகின்றது.
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க ‘புவியியல் தகவல் அமைப்பு வரைபடம் மூலம் கண்காணிக்கும் திட்டம்’ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் இதை, ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். குற்றவாளி தப்பிச் செல்லும் இடம், அவரது உருவம் உள்ளிட்ட விவரங்களை இதன் மூலம் கண்டறிய முடியும்.