சென்னை, புழல் மத்திய சிறையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காசி ராமன் சிறை காவலராக பணிபுரிந்து வந்தார். சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது மனைவி சரண்யாவுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், காசி ராமனுக்கும் சரண்யாவுக்கும் இடையே, அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த காசிராமன் வீட்டிலுள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புழல் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காவலர் தற்கொலைத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.